மக்களவை தேர்தல் 2024... 5ம் கட்ட வாக்குபதிவு... தொகுதிகள்... முக்கிய வேட்பாளர்கள் விபரம்..!

Lok Sabha Election 2024: நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் 5ம் கட்ட வாக்குப்பதிவு, நாளை, மே 20ம் தேதி நடைபெறுகிறது. இதில் 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 49 தொகுதிகளில் நடைபெறுகின்றது

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 19, 2024, 11:34 AM IST
  • முதல் நான்கு கட்ட வாக்குப்பதிவுகள் ஏப்ரல் 19, 26, மே 7 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற்றன.
  • மக்களவைத் தேர்தல் 5 ஆம் கட்டத்தில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் மற்றும் தொகுதிகள்.
  • 543 மக்களவைத் தொகுதிகளில் 379 தொகுதிகளுக்கு தற்போது வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.
மக்களவை தேர்தல் 2024... 5ம் கட்ட வாக்குபதிவு... தொகுதிகள்... முக்கிய வேட்பாளர்கள் விபரம்..! title=

Lok Sabha Election 2024: நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் 5ம் கட்ட வாக்குப்பதிவு, நாளை, மே 20ம் தேதி நடைபெறுகிறது. இதில் 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 49 தொகுதிகளில் நடைபெறுகின்றது. தற்போது நான்கு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 379 தொகுதிகளுக்கு தற்போது வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. முதல் மூன்று கட்ட வாக்குப்பதிவு சதவிகிதங்கள் முறையே 66.14 சதவீதம், 66.71 சதவீதம் மற்றும் 65.68 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. நான்காம் கட்ட வாக்குப்பதிவில் சுமார் 64 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், அடுத்த கட்ட வாக்குப்பதிவு மே 20ம் தேதி நடப்புகின்றது. 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது.

2024 லோக்சபா தேர்தல் ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், முக்கிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் உள்ள ரேபரேலி, அமேதி, லக்னோ உள்ளிட்ட 14 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 5வது கட்டத்தில், ஒட்டுமொத்தமாக, 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறும்.

முதல் நான்கு கட்ட வாக்குப்பதிவுகள் ஏப்ரல் 19, 26, மே 7 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. கடைசி இரண்டு கட்டங்களுக்கான வாக்குப்பதிவு மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் நடைபெறும். மக்களவை தேர்தலின் (Lok Sabha Elections 2024) ஏழு கட்டமாக பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்படுகின்றன. இந்திய தேர்தல் ஆணையம் (ECI) வழங்கிய தரவுகளின்படி, இது வரை நடந்த 4 கட்ட வாக்குப்பதிவில் சராசரியாக 69.16 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதுவரை 451 மில்லியன் பேர் வாக்களித்துள்ளனர்.

மக்களவைத் தேர்தல் 2024: 5-ம் கட்டமாக தேர்தல் நடக்கும் தொகுதிகள் விபரம்

பீகார்: சீதாமர்ஹி, மதுபானி, முசாபர்பூர், சரண், ஹாஜிபூர்

ஜார்கண்ட்: சத்ரா, கோடர்மா, ஹசாரிபாக்

மகாராஷ்டிரா: துலே, டிண்டோரி, நாசிக், பால்கர், பிவாண்டி, கல்யாண், தானே, மும்பை வடக்கு, மும்பை வடக்கு - மேற்கு, மும்பை வடக்கு - கிழக்கு, மும்பை வடக்கு - மத்திய, மும்பை தெற்கு - மத்திய, மும்பை தெற்கு

ஒடிசா: பர்கர், சுந்தர்கர், போலங்கிர், கந்தமால், அஸ்கா

உத்தரப்பிரதேசம்: மோகன்லால்கஞ்ச், லக்னோ, ரேபரேலி, அமேதி, ஜலான், ஜான்சி, ஹமிர்பூர், பண்டா, ஃபதேபூர், கௌசாம்பி, பாரபங்கி, பைசாபாத், கைசர்கஞ்ச், கோண்டா

மேற்கு வங்காளம்: பங்கான், பாரக்பூர், ஹவுரா, உலுபெரியா, ஸ்ரீராம்பூர், ஹூக்ளி, ஆரம்பாக்

ஜம்மு காஷ்மீர்: பாரமுல்லா

லடாக்: லடாக்

மேலும் படிக்க | 'எங்களின் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்துவிட்டோம்' - இந்தியா கூட்டணி அறிவிப்பு!

மக்களவைத் தேர்தல் 5 ஆம் கட்டத்தில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் மற்றும் தொகுதிகள்

ரேபரேலியும் அமேதியும் காந்தி குடும்பத்தின் கோட்டைகள் என கருதப்பட்டு வரும் நிலையில், இந்த தொகுதிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. முந்தைய தேர்தலில், காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தி ரேபரேலியில் வெற்றி பெற்றார். ஆனால், அவரது மகன் ராகுல் காந்தி அமேதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தார்.

ரேபரேலி: இந்த முறை ரேபரேலி தொகுதியில் ராகுல் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து போட்டியிட மாநில அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங்கை பாஜக களம் இறக்கியுள்ளது. ராகுல் காந்தி கேரளாவின் வயநாட்டிலும் போட்டியிட்டார். முந்தைய தேர்தலில் சோனியா சிங்கை 1.67 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

அமேதி: அமேதியில், இரானிக்கு சவால் விடும் வகையில், காந்தி குடும்பத்தின் நீண்ட நாள் விசுவாசியான கே.எல்.சர்மாவை, அமேதியில் காங்கிரஸ் களமிறக்கியுள்ளது. 2019ல் ராகுலை 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் இரானி தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லக்னோ: உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, சமாஜ்வாதி கட்சியின் (SP) ரவிதாஸ் மெஹ்ரோத்ரா மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) சர்வார் மாலிக் ஆகியோர் போட்டியிடுகின்றனர். முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் வசம் இருந்த லக்னோ தொகுதி 1991 முதல் பாஜக கோட்டையாக இருந்து வருகிறது.

கைசர்கஞ்ச்: சர்ச்சைக்குரிய எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மகன் போட்டியிடும் கைசர்கஞ்ச் தொகுதிக்கு திங்கள்கிழமை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதிக்கு தற்போதைய எம்.பி.யான அவரின் மகன் கரண் பூஷன் சிங்கை பாஜக களம் இறக்கியுள்ளது. இவரை எதிர்த்து சமாஜ்வாதி கட்சி சார்பில் பகத்ராம் மிஸ்ரா மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் நரேந்திர பாண்டே ஆகியோர் போட்டியிடுகின்றனர். பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டாலும், பிரிஜ் பூஷன் சிங் தனது மகனுக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்தார்.

ஜான்சி: முன்னாள் மத்திய அமைச்சர் பிரதீப் ஜெயின் ஆதித்யா காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார், அவருக்கு போட்டியாக பா.ஜ.,வின் தற்போதைய எம்.பி., அனுராக் சர்மா உள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி உள்ளூர் மாணவர் தலைவர் ரவி பிரகாஷ் மவுரியாவை வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

பாரமுல்லா, J&K: ஒமர் அப்துல்லா, ஜம்மு & காஷ்மீர் தேசிய மாநாட்டு (ஜேகேஎன்சி) சீட்டில் பாரமுல்லாவில் போட்டியிடுகிறார். அவர் மக்கள் மாநாட்டின் (PC) சஜாத் லோனை எதிர்த்துப் போட்டியிடுவார்.

மும்பை வடக்கு: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், காங்கிரஸின் பூஷன் பாட்டீலுக்கு எதிராக போட்டியிடுகிறார்.

2019 மக்களவைத் தேர்தலில், மாநில ரீதியாக பதிவான வாக்குகள் சதவிகித விபரம்

பீகார்: 57.33 சதவீதம்
ஜார்கண்ட்: 66.8 சதவீதம்
மகாராஷ்டிரா: 61.02 சதவீதம்
ஒடிசா: 73.29 சதவீதம்
உத்தரபிரதேசம்: 59.21 சதவீதம்
மேற்கு வங்கம்: 81.76 சதவீதம்
ஜம்மு காஷ்மீர்: 44.97 சதவீதம்

மேலும் படிக்க | மோடிக்கு ஓய்வு? இவர் தான் அடுத்த பிரதமர்? ராஜ்நாத் சிங் சொன்ன 'நச்' பதில்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News