ஐசிஎஸ்இ 10ஆம் வகுப்பு, ஐஎஸ்சி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விழுக்காடு விபரங்கள்

CISCE ISC 12th, ICSE 10th Result 2024 Updates: தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது-- cisce.org, results.cisce.org. தகுதி பட்டியலை இங்கே சரிபார்க்கவும்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 6, 2024, 11:53 AM IST
  • ICSE Result 2024: ஐசிஎஸ்இ டாப்பர்ஸ் விவரம்.
  • ICSE Result 2024: ஐசிஎஸ்இ தேர்ச்சி விகிதம் எவ்வளவு?
  • கம்பார்ட்மென்ட் தேர்வு எப்போது?
ஐசிஎஸ்இ 10ஆம் வகுப்பு, ஐஎஸ்சி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விழுக்காடு விபரங்கள் title=

CISCE ISC 12th, ICSE 10th Result 2024 Updates: ICSE பாடத்திட்டத்தில் CISCE என்ற தேசிய அளவிலான தனியார் கல்வி வாரியம் தேர்வை நடத்துகிறது. அந்த வகையில் இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (CISCE) 10வது (ICSE) மற்றும் 12வது (ISC) பொதுத் தேர்வு முடிவுகள் சற்று முன் வெளியாகியுள்ளது. மாணவர்கள் தங்கள் முடிவுகளை https://cisce.org/ அல்லது results.cisce.org என்ற இணையதளத்தில் பெறலாம். இதற்காக அவர்கள் UID மற்றும் குறியீட்டு எண்ணை உள்ளிட வேண்டும்.

CISCE வாரியம் கடந்த டிசம்பர், 2023 ஆம் ஆண்டில் தேர்வு தேதிகளை அறிவித்தது. இந்த ஆண்டு சுமார் 2.5 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதினர். இதில் ஐசிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் தொடங்கி மார்ச் 28 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதேசமயம் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 12 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 2 ஆம் தேதி வரை நடைபெற்றது. நீண்ட காத்திருப்புக்கு பிறகு தற்போது இன்று காலை தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. தேர்வு முடிவைப் பார்க்க மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.

மேலும் படிக்க | TN 12th results 2024 Updates: 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

* CISCE இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான cisce.org அல்லது results.cisce.org ஐப் பார்வையிடவும்.
* முகப்புப் பக்கத்தில் உள்ள ICSE அல்லது ISC போர்டு தேர்வு முடிவு 2024 இணைப்பைக் கிளிக் செய்யவும்.
* இப்போது Unique ID, Index Number மற்றும் Captcha Code ஆகியவற்றை உள்ளிடவும்.
* உங்கள் தேர்வு முடிவுகள் திரையில் தென்படும்.
* இந்த ஆன்லைன் மார்க் ஷீட்டை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள்.

கம்பார்ட்மென்ட் தேர்வு எப்போது?
CISCE வாரியம் கடந்த ஆண்டு 7 டிசம்பர் 2023 அன்று தேர்வு தேதிகளை அறிவித்தது. அதன் பிறகு அனைத்து மாணவர்களும் தேர்வெழுதினர். இந்த ஆண்டு தேர்வில் ஒன்று அல்லது இரண்டு பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்கள் கம்பார்ட்மென்ட் தேர்வை எழுத்தி தேர்ச்சி பெறலாம். கம்பார்ட்மென்ட் தேர்வு வரும் ஜூலை மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICSE Result 2024: ஐசிஎஸ்இ தேர்ச்சி விகிதம்:
இந்த ஆண்டு மொத்தம் 99.47 சதவீத (2,42,328 passed) மாணவர்கள் CISCE 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேசமயம் CISCE 12th 2024 இல், 98.15 சதவீத (98,088 passed) மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ICSE Result 2024: ஐசிஎஸ்இ டாப்பர்ஸ் விவரம்:
ஹர்குன் கவுர் மாதரு - 99.80%
அனிகா குப்தா - 99.80%
புஷ்கர் திரிபாதி - 99.80%
கனிஷ்கா மிட்டல் - 99.80%.

எஸ்எம்எஸ் மூலம் முடிவைப் பெறுவது எப்படி
தேர்வு முடிவுகளைப் பெற மாணவர்கள் தங்கள் ஏழு இலக்க ரோல் எண்ணை 09248082883 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.

CISCE 12th Result 2024: ICSE மற்றும் ISC என்றால் என்ன?
ஐசிஎஸ்இ என்றால் 10ம் வகுப்பு மற்றும் ஐஎஸ்சி என்றால் 12ம் வகுப்பு ஆகும். CISCE ஐப் பொறுத்தவரை, 10 ஆம் வகுப்பு ICSE என்றும் 12 ஆம் வகுப்பு ISC என்றும் அழைக்கப்படுகிறது.

மேலும் படிக்க | மாணவர்கள் ஷாக்... நீட் எழுதிய 50 வயது வழக்கிறஞர்... மதுரையில் சுவாரஸ்யம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News