'எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?' இந்த கேள்வி உங்களுக்கும் இருக்கா? எச்சரிக்கை!

Rumination Circle: ரூமினேஷன் சர்க்கிள் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு கூட இந்த 'நோய்' பற்றி தெரியாது...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 24, 2024, 07:57 AM IST
  • ரூமினேஷன் சர்க்கிள் என்றால் என்ன
  • பாதிக்கப்பட்டவர்களுக்கு கூட இந்த 'நோய்' பற்றி தெரியாது
  • கவலைக்கும் சோகத்துக்கும் உள்ள வித்தியாசம்
'எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?' இந்த கேள்வி உங்களுக்கும் இருக்கா? எச்சரிக்கை! title=

Stop Ruminating: வாழ்க்கையில் உங்களுக்கு ஏதேனும் தவறாக நடந்தால், எதிர்மறையான விஷயங்களைப் பற்றி நினைக்கிறீர்கள். இதுபோன்ற நிலையில் இருந்து வெளியேற முடியும் என்று அனைவரும் நினைக்கிறோம். ஆனால் அது முடிகிறதா? அப்படி வெளியேறிவிடுவது சுலபமானதா?  மகிழ்ச்சி, துக்கம் இரண்டும் வாழ்க்கையின் அங்கங்கள். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு தருணத்தில் எதிர்மறையான விஷயம் நடக்கும். சிலருக்கோ, தன்னுடைய வாழ்க்கையில் கவலை தரும் விஷயங்கள் மட்டுமே நடப்பதாக தோன்றும் காலம் வரும்.

ரூமினேஷன் வட்டம் (Rumination Circle) 

எந்த ஒரு விஷயத்திலும், சம்பவத்திலும் நல்லதைக் காண முடியாமல்,'எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?' என்ற கேள்வி பிரம்மாண்டமாக எழும். இந்த மனநிலை ரூமினேஷன் வட்டம் (Rumination Circle) என்று அழைக்கப்படுகிறது. 

துக்கம் மற்றும் கவலை

இந்த மனநிலையில் இருந்து எளிதில் வெளியேறுவது கடினம். உண்மையில், வாழ்க்கையில் சோகமான துக்கமான விஷயங்களோ, ஏதாவது தவறான விஷயங்களோ நடந்தால், மனதில் சோகம் சூழ்ந்துவிடுகிறது. அதிலிருந்து வெளியேற முடியும் என்று நினைத்தாலும் அது அனைவருக்கும் சுலபமானதாக இருப்பதில்லை. எதிர்மறையான எண்ணங்களின் வட்டத்தில் சிக்கிக் கொண்டு, திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தை சிந்திப்பதால், அதன் தாக்கத்திலிருந்து வெளியே வர முடியாது. சரியாக உண்ண முடியாமல், உறங்க முடியாமல் தவிப்பார்கள்

மனச்சோர்வு

சில நேரங்களில் இது மனச்சோர்வுக்கு கூட வழிவகுக்கும். நிபுணர்களின் கூற்றுப்படி, எதிர்மறையான விஷயங்களிலிருந்து விலகிச் செல்வதற்கான தீர்வு, அவற்றைப் பற்றி சிந்திப்பது அல்ல, உங்கள் கவனத்தை வேறு எங்காவது செலுத்துவது. இதுபோன்ற எதிர்மறைச் சுழற்சியில் நீங்கள் சிக்கிக் கொண்டால், நீங்கள் தொடர்ந்து செய்யும் தவறுகள் என்னவென்று தெரிந்துக் கொண்டால் அதிலிருந்து வெளிவருவது சுலபமாக இருக்கும்.  

மேலும் படிக்க | இதய தமனிகளில் கொழுப்பு சேராமல் தடுக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!

சிந்தனைக்கும் கவலைக்கும் உள்ள வேறுபாடு  

பெரும்பாலும் மக்கள் சிந்தனை சுழற்சியையும் கவலை மற்றும் சோகத்தையும் ஒன்றாக கருதுகிறார்கள், ஆனால் அவற்றுக்கிடையே வேறுபாடு உள்ளது. சிந்தனை சுழற்சி நீங்கள் கடந்த காலத்தில் சிக்கிக்கொண்டிருப்பதைக் குறிக்கிறது. வழக்கமாக தனக்கு ஏற்பட்ட கடந்த கால நிகழ்வுகள், பிரச்சினைகள் மற்றும் உணர்ச்சிகளைப் பற்றி சிந்தித்துக் கொண்டே இருப்பது சிந்தனை சுழற்சி, இவை பெரும்பாலும் எதிர்மறையான அனுபவங்களாகவே இருக்கும், இது உங்களை மனச்சோர்வடையச் செய்யும். சிலர் இதுபோன்ற கவலைகளில் இருந்து வெளிவர, அதிகமாக உண்பதை பார்த்திருக்கலாம்.

எதிர்கால நிகழ்வுகள் மற்றும் அவற்றின் சாத்தியமான விளைவுகளை கருத்தில் கொள்வதே கவலை. என்ன நடக்கலாம், என்ன நடக்குமோ என்ற பயம் போன்ற நிச்சயமற்ற உணர்வு அடிக்கடி ஏற்படுகிறது. இருப்பினும், கவலை என்பதற்கும், சிந்தனைச் சுழற்சிக்கும் இடையில் வித்தியாசம் உண்டு. பழைய சோகங்களைப் பர்றி அதிகம் சிந்திப்பது மன அழுத்தத்தையும் அதிகரிக்கிறது.

சிக்கலாக மாறும் சிந்தனைச் சுழற்சி

சிந்தனைச் சுழலில் சிக்கிக் கொள்வது கார் டயர் சேற்றில் சிக்குவது போன்றது. நீங்கள் எவ்வளவு அதிகமாக சுழற்றுகிறீர்களோ, அவ்வளவு ஆழமாக நீங்கள் அதில் மூழ்குவீர்கள். அதேபோல, ஒரு சுழற்சியில் சிக்கிக் கொள்ளும்போது, ​​​​மனச்சோர்வு மற்றும் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.

சிந்தனைச் சுழற்சியில் சிக்கிக்கொண்ட ஒரு நபர் தனது எதிர்மறை நினைவுகளையும் உணர்ச்சிகளையும் எப்போதும் மறக்காமல் இருப்பதால் இது நிகழ்கிறது. இது ஒருவரின் நிகழ்காலத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது நிலைமையை சீர் செய்வதற்கு பதிலாக மேலும் மோசமடையச் செய்து, சோகமாக உணர வைக்கும்.

சிந்தனைக்கு வரம்பு 

எல்லா நேரத்திலும் சிந்திப்பதை நிறுத்துங்கள். பெரும்பாலும் மக்கள் தங்கள் பிரச்சினைகளைப் பற்றி எப்போதும் சிந்தித்துக் கொண்டே இருப்பதை வழக்கமாக்கிக் கொள்கிறார்கள். இப்படிச் செய்வதன் மூலம் தீர்வு கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் வெறும் நினைப்பு மட்டுமே எதையும் செய்து முடிக்காது. ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே சிந்திப்பது நல்லது.

அளவான சிந்தனையே வளமான வாழ்க்கையைத் தரும். பிரச்சினைகளை தீர்க்க நேர்மறையான நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே நீங்கள் அதில் இருந்து வெளியே வர முடியும். பிரச்சனைகளைப் பற்றி சிந்தித்துக் கொண்டே இருந்துவிட்டு, செயல்படுவதை தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தால், அது உங்கள் கவலையை மட்டுமே அதிகரிக்கும்.

மேலும் படிக்க | கேழ்வரகில் இருக்கு ஆச்சரியமூட்டும் நன்மைகள்.... ஆனால், இவர்கள் சாப்பிடக் கூடாது

ஏதாவது கெட்டது நடக்கும் என்ற பயம்

பிரச்சினைகளைப் பற்றி சிந்திக்கவில்லை என்றால், செய்யும் செயல்கள் சரியாக இருக்காது ஏதாவது கெட்டது நடக்கும் என்ற பொதுவான நம்பிக்கை உள்ளது. ஆனால் அது அப்படி இல்லை. வாழ்க்கை என்பது தொடர்ச்சியான முன்னேற்றத்தின் பெயர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல், உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வந்த சாதனைகளில் கவனம் செலுத்துங்கள்.

விமர்சனம் - வதந்தி வட்டம்
வதந்திகளுக்கும் விமர்சனத்திற்கும் அதிக கவனம் கொடுப்பது தான் பிரச்சனையை அதிகரித்து மன அழுத்தத்தையும் கவலைகளையும் அதிகரிக்கிறது. ஒரு தவறு செய்துவிட்டாலும், இல்லை வாழ்க்கையில் ஒரு சோகம் நிகழ்ந்தாலும் அதைப் பற்றி நமக்கு என்ன தாக்கம் என்ன என்பதை சிந்தித்து அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதைவிட, மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்பது தொடர்பான விமர்சனங்களை குறித்த கவலையும், யார் என்ன சொல்வார்கள், எப்படி வதந்தி பரவும் என்பது போன்ற கவலையே பலருக்கு மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. எனவே எப்போதும் புரளிகளையும் வதந்திகளையும் நம்பாதீர்கள், அதேபோல நீங்களும் யாரைப் பற்றிய புரளியை பேசாதீர்கள், வதந்திகளை பரப்பாதீர்கள்.

பொழுதுபோக்குகளில் கவனம் செலுத்துங்கள்

கலை, நடனம், இசை என எது வேண்டுமானாலும் செய்யுங்கள். நினைவாற்றலை அதிகரிக்கும் விஷயங்களை நோக்கி நகருங்கள். இது உங்களை நேர்மறையாக மாற்றும். யோகா, தியானம், சுவாசப் பயிற்சிகள் பலன் தரும். மூளையுடன் சேர்ந்து உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். வழக்கமான உடற்பயிற்சி செய்யுங்கள். எழுதும் பழக்கம் இருந்தால், அதை தொடருங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் கவலைகளை இலகுவாக கடக்கலாம்.

மேலும் படிக்க | உங்க சர்க்கரை அளவை ஈஸியா வேகமா குறைக்கணுமா? அப்போ கற்றாழை ஒன்று போதும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News