அதிர்ச்சி தகவல்: மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டால் குழந்தை பிறக்காதா?

மன அழுத்தத்தினால் குழந்தை பிறக்கும் வாய்ப்பு குறைவது பெண்களை காட்டிலும் ஆண்களுக்கு தான் அதிகளவில் உள்ளதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றனர்.  

Written by - RK Spark | Last Updated : Nov 30, 2022, 06:26 AM IST
அதிர்ச்சி தகவல்: மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டால் குழந்தை பிறக்காதா? title=

மனஅழுத்தம் ஒரு கொடிய நோய் என்பது அனைவருக்கும் நன்கு தெரிந்த ஒன்றுதான், மன அழுத்தத்தால் பலவிதமான ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படும்.  ஒருவருக்கு காதல் தோல்வி, வேலையின்மை, வசதியின்மை, குடும்ப சூழல், வேலையினால் ஏற்படும் அழுத்தம் போன்ற பல காரணங்களால் மன அழுத்தம் ஏற்படலாம்.  தற்போது மன அழுத்தம் உள்ள ஆண்களுக்கும், பெண்களுக்கும் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு குறைவாகவுள்ளது என்கிற அதிர்ச்சியான ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.  ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி அவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு குழந்தைகள் பிறப்பதற்கான மிகவும் குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | மலட்டுத்தன்மையையும் போக்கும் கொய்யா! இப்படி சாப்பிட்டால் கருதரிக்க உதவும்

அதிலும் குறிப்பாக பெண்களை விட ஆண்களுக்கு தான் இந்த பாதிப்பு அதிகமாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது, அதிகப்படியான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டால் தான் பெண்களுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு குறைவாக இருக்கிறது ஆனால் ஆண்களுக்கு லேசான மன அழுத்தம் இருந்தால் கூட குழந்தை பிறக்கும் வாய்ப்பு குறைவாக இருப்பதாக கண்டறியப்பட்டு இருக்கிறது.  மனச்சோர்வு இல்லாத ஆண்களுடன் ஒப்பிடும்போது மனச்சோர்வினால் கண்டறியப்பட்ட ஆண்களுக்கு குழந்தைப் பேறு 33% குறைவாகவும் மற்றும்  மனச்சோர்வினால் கண்டறியப்பட்ட பெண்களுக்கு, மனச்சோர்வு இல்லாத பெண்களை விட குழந்தைப் பேறு 15% குறைவாகவும் இருப்பது தெரிய வந்துள்ளது.

உயர்கல்வி பயின்ற ஆண்கள், பெண்களிடையே மன அழுத்தத்தின் காரணமாக குழந்தைப்பேறு வாய்ப்பு குறைவாக காணப்படுகிறது.  மனசோர்வினால் பாதிக்கப்படுபவர்கள் ஆரம்பத்திலேயே அதற்கு தக்க மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.  பெண்களை காட்டிலும் ஆண்களுக்கு லேசான மனசோர்வினால் உடல் ரீதியாக பல பாதிப்புகள் ஏற்படக்கூடும்.  முடிந்தவரை ஆண்களும், பெண்களும் தங்களை தாங்களே மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முயர்ச்சி செய்யவேண்டும்.

மேலும் படிக்க | குளிர்காலத்தில் பைல்ஸ் பிரச்சனை அதிகரிக்கும் ஜாக்கிரதை!! இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News