எச்சரிக்கை! ஹார்ட் அட்டாக்கின் ‘இந்த’ அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீங்க..!!

Symptoms of Heart Attack: திடீர் மாரடைப்புக்கு காரணம் அதிக கொலஸ்ட்ரால், நரம்புகளில் சேரும் கொழுப்பு. அதிகப்படியான கொழுப்பு பிளேக் என்றும் அழைக்கப்படுகிறது. பிளேக் வெடிக்கும் போது, ​​சில நேரங்களில் கொழுப்பு உறைந்து நரம்புகளில் இரத்த ஓட்டத்தை தடுக்கிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 6, 2024, 12:11 PM IST
  • நரம்புகளில் பிளேக் உருவாகும்போது மாரடைப்பு ஏற்படுகிறது.
  • மாரடைப்பு வரக்கூடும் என எச்சரிக்கும் அறிகுறிகள் எவை?
  • மாரடைப்புக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
எச்சரிக்கை! ஹார்ட் அட்டாக்கின் ‘இந்த’ அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீங்க..!! title=

Symptoms of Heart Attack: மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுப்பழக்கத்தால், மாரடைப்பு வழக்குகள் அதிகரித்து வருகின்றன. முதியவர்கள் மட்டுமின்றி, பல சந்தர்ப்பங்களில் இளைஞர்கள் கூட மாரடைப்பு காரணமாக இறக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது. மாரடைப்புக்கு காரணம் இதயத்திற்கான இரத்த ஓட்டம் குறைவது அல்லது திடீரென தடை படுவது. திடீர் மாரடைப்புக்கு காரணம் அதிக கொலஸ்ட்ரால், நரம்புகளில் சேரும் கொழுப்பு. அதிகப்படியான கொழுப்பு பிளேக் என்றும் அழைக்கப்படுகிறது.

பிளேக் வெடிக்கும் போது, ​​சில நேரங்களில் கொழுப்பு உறைந்து நரம்புகளில் இரத்த ஓட்டத்தை தடுக்கிறது. இரத்த ஓட்டம் திடீரென தடைபடுவதால், இதயத் துடிப்பு வேகமாக அதிகரித்து, மாரடைப்பு ஏற்படுகிறது. மாரடைப்பு ஏற்படுவதற்கு 2 முதல் 10 நாட்களுக்கு முன்பே சில அறிகுறிகள் உடலில் தோன்றும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த அறிகுறிகளை கண்டறிந்தால், நீங்கள் உடனடியாக ஒரு மருத்துவரை அணுக வேண்டும். இதனால் மாரடைப்பு வராமல் தடுக்கலாம். மாரடைப்பைத் தவிர்க்க, அதன் முக்கிய அறிகுறிகள் எவை (Health Tips) என்பதை அறிந்து கொள்ளலாம்.

மாரடைப்புக்கு 2 நாட்களுக்கு முன்பு தோன்றும் சில அறிகுறிகள் 

மாரடைப்புக்குக் காரணம், பாதிக்கப்பட்ட நபரின் உணவுப்பழக்கத்தில் இருந்து அவரது மோசமான வாழ்க்கை முறையே என்று இதய நிபுணர்கள் கூறுகின்றனர். நரம்புகளில் பிளேக் உருவாகும்போது மாரடைப்பு ஏற்படுகிறது. இது நரம்புகளுக்கன ரத்த ஓட்டத்தில் தடையை உருவாக்குகிறது. சில நிமிடங்களுக்கு இரத்தத்தை தடைபட்டால் கூட, இதயத்திற்கான இரத்தம் மற்றும் ஆக்ஸிஜனின் சப்ளை தடைபட்டு மாரடைப்பு ஏற்படுகிறது. இருப்பினும், மாரடைப்புக்கு முன்பே அதன் அறிகுறிகள் தோன்றத் தொடங்குகின்றன. போதிய விழிப்புணர்வு இல்லாததால், பெருமபாலானோர், அதனை அலட்சியப்படுத்தி புறக்கணிக்கிறார்கள். மாரடைப்பு வரக் கூடும் என்பதை எச்சரிக்கும் அறிகுறிகள் எவை என்பதை அறிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க | சம்மரில் எடை குறைக்க இந்த சூப்பர் பானங்கள் உதவும்: குடிச்சு பாருங்க!!

மாரடைப்பின் சில முக்கிய அறிகுறிகள்

1. மாரடைப்புக்கு 2-4 நாட்களுக்கு முன்பு, உங்களுக்கு கடுமையான வலி, அழுத்தம், மார்பில் விறைப்பு தன்மை போன்றவற்றை உணரலாம். இந்த வலி அல்லது அசௌகரியம் தோள்கள், கழுத்து மற்றும் தாடைகளில் உணரலாம்.

2. காரணமே இல்லாமல் திடீரென அதிக அளவில் வியர்வை உண்டாகுதல்.

3. எந்தவொரு கடினமான வேலையும் அல்லது உடல் உழைப்பு இல்லாமல், உடலில் வலி அல்லது மிகுந்த சோர்வு ஏற்படுதல்

4. மார்பில் எரிச்சல் உணர்வு அதிகமாக இருத்தல்.

5. அஜீரண பிரச்சனை அதிகம் இருப்பதும் மாரடைப்புக்கான அறிகுறி.

6. அளவிற்கு அதிக குமட்டல் முதல் தலைச்சுற்றல் வரையிலான பிரச்சனைகளும் மாரடைப்பின் அறிகுறிகளாகும்

7. சுவாசிப்பதில் சிரமம், மூச்சுத் திணறல் மற்றும் உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைதல் ஆகியவையும் மாரடைப்புக்கான அறிகுறிகளாகும்.

மாரடைப்புக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக செய்ய வேண்டியது

மாரடைப்புக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும். அவரது அனைத்து ஆலோசனைகளையும் பின்பற்றவும். உங்கள் உணவில் மாற்றங்களைச் செய்வதும் அவசியம். நல்ல தூக்கம் மிக அவசியம். தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் மாரடைப்பு அபாயத்தை பெறுமளவு குறைக்கலாம். மேலும் கொல்ஸ்ட்ராலை எரிக்கும் உணவுகளை டய்ட்டில் தவறாமல் சேர்த்துக் கொள்வதால், கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் (How to Control Cholesterol) வைக்கலாம்.

மேலும் படிக்க | வயிற்று உப்புசம்: வயிற்றில் வாயு பிரச்சனையாகிவிட்டதா? வீட்டு மருத்துவம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News