டீ பிரியரா நீங்கள்? இவற்றை எப்போதும் டீயுடன் சாப்பிட வேண்டாம்.... ஆபத்து!!

Health Tips: இந்தியாவில் நாம் அனைவரும் சற்று அதிகமாகவே டீ குடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளோம். ஆனால், இதில் உள்ள நன்மை தீமைகளை நாம் அறிந்துகொள்ள வெண்டியது மிக அவசியமாகும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 25, 2023, 09:19 AM IST
  • பலர் எலுமிச்சை கலந்த தேநீர் அருந்துவார்கள்.
  • ஆனால் டீயையும் எலுமிச்சையையும் சேர்த்து குடிப்பது உங்கள் ஆரோக்கியத்தை கெடுக்கும்.
  • வயிறு தொடர்பான பிரச்சனைகள் வரலாம்.
டீ பிரியரா நீங்கள்? இவற்றை எப்போதும் டீயுடன் சாப்பிட வேண்டாம்.... ஆபத்து!! title=

Health Tips: நம் அன்றாட பணிகளில் பிஸியாக இருக்கும்போது நம்ம அவ்வப்போது சிறிய ப்ரேக் எடுக்க நினைப்பதுண்டு. அப்படிப்பட்ட 'குட்டி ப்ரேக்' எடுக்கும் வேளைகளில் நமது நண்பனாய் நம்முடன் இருப்பது 'ஒரு கப் டீ'!!. இது மட்டுமல்லாமல், காலை எழுந்தவுடன், நண்பர்களுடன் சேர்ந்து பொழுதை கழிக்கும்போது, மிக சோர்வாக இருக்கும்போது என தேநீர் அருந்த பல காரணங்கள் உள்ளன. காரணமே இல்லாமல் டீ குடிப்பவர்களும் உள்ளனர். இப்படி அனைத்து வகையான டீ பிரியர்களுக்கும் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். 

தேநீர் பிரியர்களின் ஆரோக்கிய குறிப்புகள்: 

இந்தியாவில் நாம் அனைவரும் சற்று அதிகமாகவே டீ (Tea) குடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளோம். ஆனால், இதில் உள்ள நன்மை தீமைகளை நாம் அறிந்துகொள்ள வெண்டியது மிக அவசியமாகும். நாம் டீ அருந்தும் வேளைக்கு ஏற்ப அது தனது விளைவைக் காட்டுகிறது. காலை டீ தூக்கத்தை விரட்டுவது போல மாலை டீ ஆற்றலை தருகிறது. அதேசமயம் மதியம் அருந்தப்படும் தேநீர் வயிற்றை இலகுவாக்கும். ஆனால், தேநீர் அருந்துவதுடன், சில சமயங்களில் நம் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் சிலவற்றையும் நாம் தேநீருடன் உட்கொள்கிறோம். இவற்றை தனியாக உட்கொண்டால் எந்த பிரச்சனையும் இல்லை. எனினும், தேநீருடன் சேர்த்து சாப்பிடும்போது அவை உடலுக்கு கேடான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. டீயுடன் சேர்த்து சப்பிட்டக்கூடாத சில உணவுகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.  

சில உணவுகள் மற்றும் பானங்களை டீயுடன் தவறுதலாக கூட உட்கொள்ளக்கூடாது. தேநீர் அருந்துவதுடன், உங்கள் ஆரோக்கியத்தையும் (Health) நன்கு கவனித்துக் கொள்ள வேண்டியது மிக அவசியமாகும். டீயுடன் சாப்பிடக் கூடாதவற்றை பற்றி இங்கே காணலாம். 

1. எலுமிச்சை

பலர் எலுமிச்சை கலந்த தேநீர் அருந்துவார்கள். ஆனால் டீயையும் எலுமிச்சையையும் சேர்த்து குடிப்பது உங்கள் ஆரோக்கியத்தை கெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எலுமிச்சையில் வைட்டமின் சி உள்ளது. தேநீரில் காஃபின் உள்ளது. இவை இரண்டும் சேரும் போது இரண்டின் விளைவுகளையும் இரண்டும் குறைக்கின்றன. இது மட்டுமின்றி, தேயிலையில் காணப்படும் சுவடு கூறுகள் மற்றும் எலுமிச்சை அமிலம் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக உங்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகள் வரலாம். இதனால் வயிற்றில் எரிச்சல் மற்றும் பிடிப்புகள் ஏற்படும்.

மேலும் படிக்க | பக்காவா எடையை குறைக்கும் பனீர்: சூப்பரா தொப்பையை குறைக்க இப்படி சுவையா சாப்பிடுங்க

2. மஞ்சள் கலந்த பொருட்களை சாப்பிட வேண்டாம்

தேநீரில் காஃபின் உள்ளது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இது குடித்த பிறகு ஆற்றலை வழங்குகிறது. மறுபுறம், நீங்கள் தேநீருடன் மஞ்சள் கொண்ட எதையும் உட்கொண்டால், அது உங்கள் ஆரோக்கியத்தை மோசமாக்குகிறது. ஏனெனில் மஞ்சள் சூடான ஒரு பொருளாகும். அப்படிப்பட்ட நிலையில் டீயுடன் மஞ்சள் கலந்த ஏதாவது ஒன்றைச் சாப்பிட்டால் உடலில் சூடு அதிகரிக்கலாம். இதன் காரணமாக உங்களுக்கு வியர்வை அல்லது தலைச்சுற்றல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். மேலும் இதனால் உடலில் வாயுத் தொல்லையும் உருவாகி பிரச்சனை ஏற்படலாம். 

3. வறுத்த தின்பண்டங்கள்

மழைக்காலத்தில் மக்கள் டீ, பக்கோடா போன்றவற்றை அதிகம் விரும்புவார்கள். பெரும்பாலும் டீயுடன் பொரித்த உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் பக்கோடா போன்ற டீப் ஃப்ரை செய்யப்பட்ட உணவுகள் தேநீருடன் சேர்த்து சாப்பிடும் போது தீங்கு விளைவிக்கும். பக்கோடாவில் உள்ள கடலை மாவு, ஊட்டச்சத்துக்கள் உடலில் உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது. இதனால் வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | நீரிழிவு முதல் உடல் பருமன் வரை... வியக்க வைக்கும் கறிவிப்பிலை வைத்தியம்...!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News