TNEA 2022 கவுன்சிலிங் முதல் சுற்றுக்கான புரோவிஷனல் இட ஒதுக்கீடு இன்று

TNEA 2022 கவுன்சிலிங் புரோவிஷனல் இட ஒதுக்கீடு சுற்று 1 க்கு இன்று வெளியிடப்படும். TNEA கவுன்சிலிங் செயல்முறையின் முதல் சுற்றுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் அதற்கான முடிவுகளை இன்று tneaonline.org இல் பெறுவார்கள். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 13, 2022, 11:57 AM IST
  • TNEA 2022 கவுன்சிலிங்
  • TNEA 2022 கவுன்சிலிங் - முக்கியமான தேதிகள்
  • எப்படி சரிபார்ப்பது என்பது தெரிந்து கொள்ளுங்கள்
TNEA 2022 கவுன்சிலிங் முதல் சுற்றுக்கான புரோவிஷனல் இட ஒதுக்கீடு இன்று title=

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை, TNEA 2022 கவுன்சிலிங் நடந்து வருகிறது. முதல் சுற்றுக்கான புரோவிஷனல் ஒதுக்கீடு இன்று, செப்டம்பர் 13, 2022 அன்று அறிவிக்கப்படும். இந்த ஒதுக்கீடு அட்டவணையின்படி அதிகாரப்பூர்வ இணையதளமான tneaonline.org இல் பகிரங்கப்படுத்தப்படும். தேர்வு நிரப்புவதற்கான கடைசி தேதி செப்டம்பர் 12, 2022 ஆகும். கல்வியியல், தொழிற்கல்வி மற்றும் அரசு ஒதுக்கீடு 7.5 சதவீதம் பிரிவுகளில் TNEA கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்த மாணவர்கள் இன்று தங்கள் புரோவிஷனல் ஒதுக்கீட்டைப் பார்க்க முடியும்.

TNEA 2022 கவுன்சிலிங் - முக்கியமான தேதிகள்

புரோவிஷனல் அலாட்மெண்ட் செப்டம்பர் 13, 2022 காலை 10 மணிக்கு முன்
சீட் உறுதிப்படுத்தல் செப்டம்பர் 13 முதல் 14, 2022 வரை மாலை 5 மணி வரை
ஏற்றுக்கொள்வதற்கும் சேர்வதற்குமான புரோவிஷனல் அலாட்மெண்ட்டின் வெளியீடு செப்டம்பர் 15, 2022 காலை 10 மணிக்கு முன்
சேரும் தேதிகள் செப்டம்பர் 15 முதல் 22, 2022 வரை மாலை 5 மணி வரை
TNEA 2022 கவுன்சிலிங் சுற்று 2 தொடங்கும் தினம் செப்டம்பர் 25, 2022 காலை 10 மணி முதல்
 

மேலும் படிக்க | சாத்தான்குளம் வழக்கு: சிபிஐ கூடுதல் குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்கள்

மேலும் படிக்க | தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை TNEA 2020 தரவரிசை பட்டியல் வெளியீடு: tneaonline.org இல் சரிபார்க்கவும்

TNEA கவுன்சிலிங் 2022: எப்படி சரிபார்க்க வேண்டும்
* தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை,TNEA- tneaonline.org இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்
* முதல் சுற்று புரோவிஷனல் இட ஒதுக்கீடு பட்டியலுக்கு இணைப்பை கிளிக் செய்யவும்
* தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பத்தார்களின் பட்டியலுடன் ஒரு PDF திரையில் தோன்றும்
* பதிவிறக்கம் செய்து, மேலும் குறிப்புக்கு பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

TNEA 2022 கவுன்சிலிங் இரண்டாவது சுற்று செப்டம்பர் 25 ஆம் தேதி, 2022 முதல் காலை 10 மணி முதல் தொடங்கும். முதல் சுற்றில் இடம் ஒதுக்கப்படாத மாணவர்கள் இரண்டாவது சுற்றில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். முதல் சுற்றுக்கான தற்காலிக ஒதுக்கீடு கிடைத்ததும், தேர்வர்களின் நலனுக்காக சரிபார்ப்பதற்கான படிகள் மற்றும் நேரடி இணைப்புகள் இங்கே பகிரப்படும்.

மேலும் படிக்க | பாரத் ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினம்; பிரதமர், குடியரசுத் தலைவர் அஞ்சலி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News