மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு.. குறைந்த செலவில் டூர் போகலாம்

வயதான மூத்த குடிமக்கள் சுற்றுலா சென்று வர சிறப்பு டூர் பேக்கேஜ் ஒன்றை ஐஆர்சிடிசி தற்போது அறிமுகம் படுத்தியுள்ளது. அதன் முழு விவரத்தை இங்கே காண்போம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 24, 2024, 11:30 AM IST
  • இந்த டூர் பேக்கேஜுக்கு முன்பதிவு செய்வது எப்படி?
  • இந்த ஜோதிர்லிங்கங்களை தரிசனம் செய்யலாம்.
மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு.. குறைந்த செலவில் டூர் போகலாம் title=

IRCTC Tour Package 2024: விடுமுறை காலம் தொடங்கிவிட்டது. இந்த நேரத்தில் பெரும்பாலான மக்கள் சுற்றுல செல்லவார்கள். குறிப்பாக வயதானவர்களுக்கு கோவில், குளம் போன்ற இடங்களுக்கு சுற்றுலா செல்வார்கள். இந்நிலையில், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் புனிதமான இடங்களுக்குச் செல்ல ஒரு அருமையான வாய்ப்பு வந்துள்ளது. அதற்கான சிறப்புத் திட்டத்தை ஐஆர்சிடிசி தற்போது அறிவித்துள்ளது.

இந்நிலையில் வரப் போகும் மே மாதம் பக்தர்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கப் போகிறது. இந்திய ரயில்வேயின் (Indian Railways) துணை நிறுவனமான ஐஆர்சிடிசி, இது போன்ற ஒரு டூர் பேக்கேஜை கொண்டு வந்துள்ளது, இதன் மூலம் நீங்கள் ஒரு நபருக்கு ரூ.1,074 இஎம்ஐ செலுத்தி பயணிக்கலாம். இந்த டூர் பேக்கேஜ் வருகிற மே 22 ஆம் தேதி முதல் தொடங்கும். மேலும் இந்த பயணம் மொத்தம் 12 நாட்கள் வரை இருக்கும். சுற்றுலா பேக்கேஜின் கீழ், பக்தர்களுக்கு 7 ஜோதிர்லிங்க தரிசனம் செய்ய வாய்ப்பு வழங்கப்படும்.

மேலும் படிக்க | EPF Balance Check: PF கணக்கில் வட்டித்தொகை வந்துவிட்டதா? 4 வழிகளில் சுலபமாக செக் செய்யலாம்

இந்த ஜோதிர்லிங்கங்களை தரிசனம் செய்யலாம்:
இந்த டூர் பேக்கேஜின் கீழ், பக்தர்கள் ஓங்காரேஸ்வரர், மகாகாலேஸ்வரர், சோம்நாத், பேட் துவாரகை, துவாரகாதீசர் கோயில், நாகேஸ்வரர் கோயில், திரிம்பகேஸ்வரர், கிரிஸ்னேஸ்வரர் கோயில் மற்றும் பீமாசங்கர் ஆகிய ஜோதிர்லிங்கங்களை தரிசிக்க வாய்ப்பை நீங்கல் பெறுவீர்கள். இந்த ரயிலில் மொத்தம் 767 இருக்கைகள் உள்ளன. நீங்கள் ஸ்லீப்பர் வகுப்பில் பயணம் செய்தால், ஒரு நபருக்கு 22,150 ரூபாய் செலுத்த வேண்டும். அதேசமயம், மூன்றாவது ஏசிக்கு ரூ.36,700 மற்றும் இரண்டாவது ஏசிக்கு ரூ.48,600 கட்டணம் செலுத்த வேண்டும். நீங்கள் விரும்பினால், ரூ.1,074 மாதாந்திர EMI இல் இந்தப் பயணத்தைப் பெறலாம்.

 

Category

Train Journey

Single/ Double/ Triple

Child (5-11)

Comfort

2A

Rs.48600/-

Rs.46700/-

Economy

SL

Rs.22150/-

Rs.20800/-

Standard

3A

Rs.36700/-

Rs.35150/-

முன்பதிவு செய்வது எப்படி?
இந்த டூர் பேக்கேஜுக்கு முன்பதிவு செய்ய வேண்டுமானால் நீங்கள் ஐஆர்சிடிசி அலுவலகம் மற்றும் 8287930913 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு இந்தத் பேக்கேஜை முன்பதிவு செய்யலாம். இந்த பேக்கேஜில் கட்டணம், தங்குமிடம், காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு மற்றும் உள்ளூர் போக்குவரத்து ஆகியவை அடங்கும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. லக்னோவின் கோமதி நகர், பர்யாதன் பவனில் அமைந்துள்ள IRCTC அலுவலகத்தைத் தவிர, ஐஆர்சிடிசி இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் இந்தப் பயணத்தை முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.

டூர் பேக்கேஜின் முழு விவரம்:

நாட்களின் எண்ணிக்கை : கால அளவு (EX - YNRK): 11 இரவுகள்/12 நாட்கள்
சுற்றுப்பயணம் : ஓங்காரேஸ்வரர், மகாகாலேஸ்வரர், சோம்நாத், பேட் துவாரகை, துவாரகாதீசர் கோயில், நாகேஸ்வரர் கோயில், திரிம்பகேஸ்வரர், கிரிஸ்னேஸ்வரர் கோயில் மற்றும் பீமாசங்கர் ஜோதிர்லிங்கம்.
மொத்த பெர்த்கள் : 767 (கம்ஃபர்ட்: 49, ஸ்டாண்டர்ட்: 70, எகானமி: 648).

மேலும் படிக்க | Changes From May 1, 2024: கேஸ் சிலிண்டர் முதல் வங்கிக் கட்டணம் வரை... இந்த விதிகள் மே 1 முதல் மாறும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News